போலந்தில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் களம்
போலந்தில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், முதலாவது சுற்றுத் தேர்தல் கடந்த 18ம் திகதி நடைபெற்றது.
இரண்டாவது சுற்று ஜூன் மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முதலாவது சுற்றுத் தேர்தல் முடிவுகளின் படி Civic Coalition கட்சியின் வேட்பாளர் ராஃபேல் ட்ர்சாஸ்கோவ்ஸ்கி, 31.36% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து, PiS (Law and Justice) கட்சியின் ஆதரவாளர் கரோல் நாவ்ரோக்கி, 29.54% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஏனைய சிறிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மொத்தமாக 21% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இரண்டாவது சுற்றில் இந்த 21% வாக்காளர்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது, தேர்தல் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக அமையும். இரண்டாவது சுற்றில், ட்ர்சாஸ்கோவ்ஸ்கி மற்றும் நாவ்ரோக்கி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இருவரும் தங்களது ஆதரவாளர்களை மேலும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு பிரச்சார முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வலது மற்றும் இடது சார்ந்த கட்சிகளின் ஆதரவு, இருவருக்கும் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.
இந்த தேர்தலானது போலந்தின் எதிர்கால அரசியல் நிலையை தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.