உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதை தடுக்க வேண்டுமா? கவலைய விடுங்க
இன்று பலர் கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள். உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான்.
அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இதனால் உடலில் அதிகளவு கெட்ட கொழுப்பு தங்கிவிடுகின்றது.
ஏனெனில் அவ்வாறு தங்கும் கெட்ட கொழுப்புக்கள் ரத்தக் குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன.
எனவே இவற்றை தடுக்க ஒரு சில உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்..
- பச்சை காய்கறிகளான கீரை வகைகள், கோவை மற்றும் பீன்ஸ் இது போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்து வர உடலில் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும். கீரை வகைகளில் பசலைக்கீரை கெட்ட கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பை கரைப்பதில் எலுமிச்சை சிறந்து விளங்குகின்றது.
- இரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதில் மீன்கள் முக்கியமானவை. இருதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் உணவுகளில் மீன்கள் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.
- அதிக நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்-டி நிறைந்துள்ள பழம் அவகோடா. இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பினை கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
- பூண்டில் அலிசின் எனும் இதயத்தை பாதுகாக்கும் அற்புதமான பொருள் நிறைந்திருக்கின்றது. இது கொலஸ்ட்ராலை வேகமாக குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.