கனடாவின் கரையோர பகுதிகளில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவின் கரையோர பகுதிகளில் எரிபொருட்களுக்கான விடையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கனடாவின் கரையோர பகுதிகளான நோவா ஸ்கோஷியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு மற்றும் நியூ பிரவுன்ஸ்விக் ஆகிய பிராந்தியங்களில் இவ்வாறு எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன.
குறிப்பாக பெற்றோலின் விலை குறைவடைந்துள்ளது.
நோவா ஸ்கோஷியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2.4 சதங்களினால் குறைவடைந்துள்ளது.
இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 168.8 சதங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசனின் விலையும் குறைவடைந்துள்ளது. பிரின்ஸ் ஆப் எட்வர்ட் தீவுகளில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2.3 சதங்களினால் குறைவடைந்து.
173.5 சதங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நியூ பிரவுன்ஸ்விக் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இரண்டு தசம் நான்கு சதங்களினால் குறைவடைந்து.
170 சதங்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகின்றது.