கனடாவின் எந்தப் பகுதிகளில் வீட்டு விலை குறைந்துள்ளது?
கனடாவில் வீட்டு விலைகள் மிக உயர்வடைந்து சென்ற நிலையில் அண்மைய மாதங்களில் விலைகள் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது.
வட்டி வீத அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என் அச்சம் காரணமாக இவ்வாறு வீட்டு விலைகள் குறைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இந்த விலை வீழ்ச்சியானது ஒட்டுமொத்த கனடா முழுவதிலும் ஒரே மாதிரியான வீதத்தினால் வீழ்ச்சியடையவில்லை.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத சராசரி வீட்டு விலை 637673 டொலர்கள் எனவும் இது கடந்த ஆண்டு ஆஸ்ட் மாதத்தை விடவுமும் 3.9 வீத வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய ரியல் எஸ்டேட் ஒன்றியத்தினால் இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எனினும் சில பிராந்தியங்களில் சிறு விலை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் ஆகஸ்ட் மாதம் சராசரி வீட்டு விலை 904800 டொலர் எனவும் இது பெப்ரவரி மாதத்தை விடவும் 15.9 வீத வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோ பெரும்பாக பகுதியில் வீட்டு விலைகள் 15.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கேம்ரிட்ஜில் வீட்டு விலைகள் 24.5 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஓக்வெலி, லண்டன், கிட்சனர் போன்ற பகுதிகளில் வீட்டு விலைகள் 23 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவல் கடந்த ஆறு மாதங்களில் 5 வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கியூபெக்கில் மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப் பகுதியில் வீட்டு விலை 2.5 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அட்லாண்டிக் கனடாவில் பெப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப் பகுதியில் வீடுகளின் விலைகள் 10.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.