துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதமர்!
கடந்த வாரம் பிராட்டிஸ்லாவாவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஸ்லோவாக்கியாவின் பிரதமர் எட்வர்டோ ஹெகர் (Eduardo Heger) முக்கிய இலக்கானார்.
இவ்வாறு காவல்துறைத் தலைவர் ஸ்டீபன் ஹம்ரான்(Stephen Hamron) கூறியதாக ஸ்லோவாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்த அன்று குற்றவாளி பிரதமரின் வீட்டில் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்துகின்றனர்.
ஆனால் பிரதம மந்திரியைத் தாக்கும் தனது திட்டம் தோல்வியடைந்ததை அந்த நபர் உணர்ந்ததும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தார்.
19 வயதான குற்றவாளி, அருகிலுள்ள ஓரின சேர்க்கையாளர் விடுதியில் பார்வையாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.