மகளைத் தனியாக வெளியே அனுப்ப பயப்படும் பிரதமர் ரிஷி சுனக்!
என் மகளைத் தனியாக வெளியே அனுப்ப பயமாக இருக்கிறது என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) கூறியிருக்கிறார் .
நாட்டில் நிலவும் மோசமான சூழல் காரணமாக தன் மகளைத் தனியாக வெளியே அனுப்ப தான் பயந்ததாகத் தெரிவித்துள்ளார் ரிஷி(Rishi Sunak) .
தான் முன்பு சேன்ஸலராக இருந்தபோது, வழக்கமாக சேன்ஸலர்கள் தங்கும் Downing தெருவிலுள்ள வீட்டில் தங்காமல் அங்கிருந்து வெளியேறியதற்கு அதுதான் காரணம் என்று கூறியுள்ளார் அவர்.
அப்போதுதான் என் மூத்த மகள் தானாகவே நடந்து பள்ளிக்குப் போகத் துவங்கியிருந்தாள். ஆனால், பிள்ளைகள் பத்திரமாக வீடு திரும்பவேண்டும் என்றுதானே எல்லா பெற்றோரும் நினைப்போம்? என் பிள்ளை மட்டுமில்லை, எல்லா பிள்ளைகளும் பாதுகாப்பாக நடந்து திரியவேண்டும்.
அந்த பாதுகாப்பை நான் உறுதி செய்ய விரும்புகிறேன் என்று ரிஷி(Rishi Sunak) கூறியுள்ளார். இங்கிலாந்திலுள்ள லிவர்பூலில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் இரண்டு மர்ம நபர்கள் நுழைந்த நிலையில், அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், ஒலிவியா (Olivia Pratt-Korbel) என்ற ஒன்பது வயது சிறுமி பலியான விடயம் பிரித்தானியாவையே உலுக்கியது.
லண்டன் உட்பட பிரித்தானிய நகரங்கள் பலவற்றில் நிகழும் வன்முறைச் செயல்கள் குறித்து தினமும் கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஒலிவியாவின் மரணம் குறித்து நினைவுகூர்ந்த ரிஷி(Rishi Sunak) , இந்த குற்றவாளிகளைப் பிடித்து சிறையில் அடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்.
அதற்காகத்தான் அடுத்த சில ஆண்டுகளில் நாம் 10,000 கூடுதல் சிறைகளைக் கட்ட இருக்கிறோம் என்றார்.
குற்றவாளிகளைப் பிடித்து சிறையில் தள்ளி குற்றச்செயல்களை குறைத்தே ஆகவேண்டும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) என்கிறார்.