இப்போது வேண்டாம் ரத்துச் செய்யுங்கள்; கனேடியர்களிடம் பிரதமர் கோரிக்கை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனேடியர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுமன்றி, உள்நாட்டுப் பயணங்களையும் தவிர்த்துக் கொண்டு வீடுகளில் தங்கியிருக்குமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கேட்டுக் கொண்டுள்ளார்.
“யாரும் விடுமுறையை எடுத்துக் கொள்வதற்கான நேரம் இதுவல்ல என்றும், அவ்வாறான திட்டங்களை கொண்டிருப்பவர்கள் அதனை ரத்துச் செய்யுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வசந்த காலத்தில் நாடெங்கும் செல்லும் பயணத் திட்டத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு இது சரியான நேரம் அல்ல. வீடுகளிலேயே தங்கியிருந்து கனேடியர்கள் கொரோனா பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவசியமற்ற பயணங்களுக்கு எவரேனும் முன்பதிவு செய்திருந்தால் அதனை ரத்துச் செய்து விடுமாறும் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியுள்ளார்.