கனடாவின் இந்தப் பகுதியைச் சேர்ந்த 18000 பேர் மின்சாரம் இன்றி 10 நாட்கள் தவிப்பு
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவுகளின் மக்கள் கடந்த 10 நாட்களாக மின்சார வசதி இன்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் மின்சார வசதியின்றி தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் அட்லாண்டிக் கனடா பகுதியை தாக்கிய பியோனா புயல் காற்று காரணமாக இவ்வாறு சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
புயல் தாக்கத்தினால் மாறிட்டம் பகுதியைச் சேர்ந்த 18000 வாடிக்கையாளர்கள் கடந்த 10 நாட்களாக இணைய வசதி மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளின்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாரிடைம் எலக்ரிக் மின்சார சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களே மின்சார வசதியின்றி நாள் கணக்கில் மின்சாரத்திற்காக காத்திருக்கின்றனர்.
குளிர்காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சார தேவை மிகவும் அத்தியாவசியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
. புயல் தாக்கத்தினால் மருத்துவ சேவை உள்ளிட்ட இனிய பல சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புயல் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரின்ஸ் அட்வான்ஸ் தீவுகளின் இயல்பு வாழ்க்கை கடந்த 10 நாட்களாகவே பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.