அமெரிக்க குடிமகனானார் இளவரசர் ஹாரி!
பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இளவரசர் ஹாரி தன்னை ஒரு அமெரிக்க குடிமகன் எனக் கூறியுள்ளார்.
பிரித்தானிய மன்னரான சார்ல்ஸின் மகனான ஹாரி, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார்.
தற்போது, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மனைவி மேகன் மார்க்கல், குழந்தைகள் ஆர்ச்சி, லில்லிபெட் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
2019 இல் அமெரிக்காவில், `Travalyst' என்றொரு பயணம் சார்ந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அப்போது , ஹாரி அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் தனது வசிப்பிடமாகவும், சொந்த நாடாகவும் பிரிட்டனைக் குறிப்பிட்டிருந்தார்
இந்நிலையில் ஹரி தற்போது அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், தனது புது நாடாக அமெரிக்காவைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றும், இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.