வில்லியமுக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ;பிரித்தானிய அரச குடும்பத்தில் வெடித்த சர்ச்சை!
அண்மையில் இளவரசி கேத் மிடில்டன் குறித்த தகவல் பரபரப்பு அடங்குவதற்குள் பிரித்தானிய இளவரசர் வில்லியம் குறித்த தகவல் ஒன்று தற்போது தீயாய் பரவி வருகின்றது.
பிரித்தானிய அரச குடும்ப நிகழ்வுகள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து அறிந்துகொள்வதில் உலக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
வில்லியமுக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு
இந்நிலையில் , இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டனின் நெருங்கிய தோழி ரோஸ் ஹான்பரி இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக பரவும் தகவல்தான் இப்போது விவாதப்பொருளாகி உள்ளது.
ஸ்டீபன் கோல்பர்ட் என்பவர் நேற்று முன்தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், தன்னிடம் இங்கிலாந்து அரச குடும்பத்தைப் பற்றிய கவலை தரும் செய்தி இருப்பதாக கூறினார். "இங்கிலாந்தின் இளவரசி கேத் மிடில்டன் வெளியில் வராததால், வருங்கால மன்னர் வில்லியமுக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று இணையவாசிகள் யூகிக்கிறார்கள்.
அந்த பெண் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என நினைக்கிறேன். வில்லியம் மற்றும் ரோஸ் ஹான்பரி இடையே தொடர்பு இருப்பதாக 2019 முதல் வதந்திகள் உள்ளன. பின்னர் ரோஸ், வில்லியமின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான டேவிட்டை திருமணம் செய்துகொண்டார்" என்றார்.
இதன் காரணமாக கோல்பர்ட் மற்றும் ரோஸ் ஹான்பரி இருவரின் பெயர்களும் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆனது. இந்த தகவல் தொடர்பாக ஹான்பரி, கேத் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலோ அல்லது மறுப்போ வெளியிடப்படவில்லை.
இருப்பினும், வில்லியமின் சட்டக்குழுவினர் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அவை ஆதாரமற்றவை என்றும், தீங்கு விளைவிக்கும் நோக்கில் பரப்பப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளனர்.
அதேவேளை முன்னாள் மாடல் அழகியான ரோஸ் ஹான்பரி, இளவரசி கேத் மிடில்டனின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் ஆவார். அதுமட்டுமல்லாது ரோஸ் ஹான்பரியின் குடும்பம் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் நீண்ட கால தொடர்புடையது.
ஹான்பரியின் பாட்டி லேடி எலிசபெத் லம்பார்ட், 1947-ல் மன்னர் பிலிப் மவுண்ட்பேட்டனை, இரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் செய்தபோது மணப்பெண்ணின் தோழியாக இருந்துள்ளார். மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் ரோஸ் ஹான்பரியின் மகன் லார்ட் ஆலிவர் முக்கிய பங்கு வகித்தார்.