கனடாவுக்கு ராஜ குடும்பத்தின் அடுத்த அரசுமுறைப்பயணம்
கனடாவுக்கு ராஜ குடும்பத்தின் அடுத்த அரசுமுறைப்பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மே மாதம், பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் கனடாவுக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டார்கள்.
ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருந்த நேரத்தில், கனடா பிரித்தானிய மன்னரின் கட்டுப்பாட்டிலுள்ள நாடு என்பதை ட்ரம்புக்கு உணர்த்தும் வகையில், சரியான நேரத்தில் கனடாவுக்கு பயணித்தார் மன்னர் சார்லஸ்.
இந்நிலையில், அடுத்த மாதம், மற்றொரு ராஜ குடும்ப உறுப்பினர் கனடாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஆம், எடின்பர்க் கோமகளான இளவரசி சோபி, செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை கனடாவில் அரசுமுறைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இளவரசி சோபி, மன்னர் சார்லசின் தம்பியான இளவரசர் எட்வர்டின் மனைவி ஆவார்.
இளவரசி சோபி, கனடாவின் ஆல்பர்ட்டாவில் நடைபெற இருக்கும் Spruce Meadows Masters tournament என்னும் விளையாட்டுப்போட்டிகளின் 50ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்காக அங்கு செல்கிறார்.
இளவரசி சோபிக்கு சமீபத்தில் Spruce Meadows Masters tournament அமைப்பின் பொறுப்பாளர் என்னும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.