கொழும்பில் தரையிறங்கிய வானூர்திகள் ; ஒன்று திரண்ட உலகப் பிரமுகர்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்காக, 15 தனியார் வானூர்திகள் இலங்கைக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த வானூர்திகள், பெப்ரவரி 14 முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு வரத் தொடங்கின.

அவற்றில், செல்வந்தர்களான கிரிக்கெட் ரசிகர்கள், சர்வதேச வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் உயர்மட்ட பிரதிநிதிகள் வருகை தந்தனர்.
இதில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா உட்பட அதிகாரப்பூர்வ தூதுக்குழுவினரும் அடங்குவர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 61 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.