டொரொன்டோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு
டொரொன்டோ பியர்சன் விமான நிலையத்தில் இன்று காலை ஒரு தனியார் விமானம் தரையிறங்கும் போது அதன் தரையிறக்கும் சக்கரங்களில் கோளாறு ஏற்பட்டது.
இருப்பினும், இதில் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் இரு பணியாளர்கள் மட்டுமே இருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக இருந்ததாகவும், விமானம் தரையிறங்கிய பின்னர் ஓரளவிற்கு ஓடுபாதையில் நகர்ந்து, பின்னர் ஒரு சந்திப்புப் பகுதியில் நின்றுவிட்டதாகவும் விமான நிலையம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. இதுகுறித்து தற்போது பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தால் விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எனினும் மற்ற இரு ஓடுபாதைகள் வழியாக விமானங்கள் வழக்கம்போல பயணங்களை மேற்கொள்கின்றன.
சில விமானங்களுக்கு தாமதம் ஏற்படக்கூடும் என பியர்சன் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.