புச்சா நகரில் ஆய்வு செய்த ஐரோப்பியாவின் முக்கியஸ்தர்கள்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்(Ursula van der Leyen) உக்ரைன் நகரமான புச்சா நகரை சென்றடைந்த பின்னர் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
ரஷ்ய துருப்புக்களால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
அப்பாவி பொதுமக்கள் படுகொலைகளை குறிப்பிட்டு, "மனிதநேயம் சிதைந்துவிட்டது" என்று உர்சுலா (Ursula van der Leyen)வேதனை தெரிவித்தார்.
புச்சாவில் சமீபத்தில் நடந்த பொதுமக்கள் படுகொலைகளுக்கு மேற்கத்திய நாடுகளின் கடும் விமர்சனங்களை ரஷ்யா எதிர்கொண்டுள்ள நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகியவை ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை நிறைவேற்றியுள்ளன.
மேலும் ரஷ்ய நிலக்கரி இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

