திடீரென பாதியாகக் குறைந்த ஆசிய பணக்கார பெண்மணியின் சொத்து மதிப்பு!
சீனாவில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் கடும் வீழ்ச்சி அடைந்ததன் எதிரொலியாக ஆசியாவின் பணக்கார பெண்மணியான யாங் ஹுய்யனின் (Yang Huiyan) சொத்து மதிப்பு பாதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடு விற்பனையில் சரிவு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் கட்டுமானம் நிறைவு பெறாத வீடுகளின் உரிமையாளர்கள் தவணை செலுத்த மறுப்பது போன்ற காரணங்களால் சீனாவின் மிகப்பெரும் கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான Country Garden Holdings-ன் பங்கு மதிப்பு கடுமையாக சரிந்தது.
இதன் காரணமாக , அந்நிறுவனத்தின் உரிமையாளரான யாங் ஹுய்யனின் (Yang Huiyan) சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 91,000 கோடி ரூபாயில் இருந்து சுமார் 87,000 கோடி ரூபாயாக குறைந்தது.
அதேவேளை சொத்து மதிப்பு பாதிக்கும் கீழ் குறைந்த போதும் அவர் இன்னும் ஆசியாவின் பணக்காரப் பெண்மணியாகத் யாங் ஹுய்யனின் (Yang Huiyan) திகழ்கிறார்.