இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம்

Srilanka Protest People President Against contradictory Disappearance Vavanya
By Independent Writer Feb 11, 2022 10:22 AM GMT
Report

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா - மன்னார் பிரதான வீதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதனால் ,பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் | Protest Against The President S Visit

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்பவிழா நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அதிதியாக கலந்து கொண்டிருந்தார். அதன்போது ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் | Protest Against The President S Visit

ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்த அந்த பகுதிக்கு செல்ல முற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களை பம்பைமடு இராணுவச் சோதனைசாவடியில் குவிக்கப்பட்டிருந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து முன்செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்கள்.

“ எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லையா, நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா, எங்களை மட்டும் எப்போதுமே எதற்காக தடுக்கிறீர்கள் நாங்கள் பயங்கரவாதிகளா, எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம் தானா?” என்று பொலிசாரை பார்த்து அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். “ எமது பிள்ளைகளை அவர்களை நம்பியே நாம் ஒப்படைத்தோம்.

இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் | Protest Against The President S Visit

எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு அனுமதி வழங்குமாறு” போராட்டக்காரர்கள் தெரிவித்தபோதும் அதனை பொருட்படுத்தாத பொலிசார் அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் இருவரை மாத்திரம் வந்து ஜனாதிபதியை சந்திக்குமாறு கோரினர்.

இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் | Protest Against The President S Visit

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் நாம் அவரை சந்திக்க வரவில்லை எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன். கொலை குற்றவாளி எப்படி நீதிபதியாக மாறமுடியும் என்றனர்கள்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குறித்த பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்களை வழிமறித்து முன்செல்ல முடியாதவாறாக தடுத்து நின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.  

இலங்கை ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் | Protest Against The President S Visit

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US