அன்டனி பிளிங்கெனை யுத்த குற்றவாளி என கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
அமெரிக்கா செனெட்டின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் வெளிவிவகார அமைச்சர் அன்டனி பிளிங்கென் சாட்சியமளித்தவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை யுத்த குற்றவாளி என அழைத்தனர்.
செனெட் குழுவில் சாட்சியமளிப்பதற்காக பிளிங்கென் நுழைந்த வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுந்து நின்றனர்.
கரங்களில் சிவப்பு நிற வர்ணம்
அவர்கள் தங்கள் கரங்களில் சிவப்பு நிற வர்ணத்தை பூசியிருந்ததுடன் 40,000 பாலஸ்தீனியர்களின் குருதியும் அன்டனி பிளிங்கெனின் கரங்களில் உள்ளது எனஅவர்கள் கோசமிட்டனர்.
அதன் பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை வெளியே அழைத்து சென்றவேளை இனப்படுகொலையின் செயலாளர் ,இரத்தம் தோய்ந்த கசாப்பு கடைக்காரன் எனவும் அவர்கள் கோசம் எழுப்பினர்.
எனினும் அவர்களை கண்டுகொள்லாத அன்டனி பிளிங்கென் அவர்களுடன் உரையாட முற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.