கனடா அரச பணியாளர்கள் குறைப்பு குறித்து விளக்கம்
அரச பணியாளர்கள் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற அச்சங்கள் நிலவும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி, பணியாளர் குறைப்புகள் “இயல்பான பணியாளர் வெளியேற்றம் (Attrition)” மூலம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
பணியாளர் எண்ணிக்கை குறைப்பது என்பது செயற்கையாக நடைபெறாது என தெரிவித்துள்ளார்.
வயது, ஓய்வு, தனியார் துறையில் புதிய வேலை வாய்ப்புகள் போன்ற காரணங்களால் இயல்பாக பணியாளர்கள் வெளியேறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த இயல்பான செயல்முறையால் அரசு அளவை நிர்வகம் செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில், கூட்டாட்சி பொது சேவையில் பணியாளர் எண்ணிக்கையை குறைக்காமல் கட்டுப்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தது.
கார்னி அதே நிலைப்பாட்டைத் தொடர்வதாகவும், சேவைகள் குறையாமல் அரசு செலவுகளை கட்டுப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
2015 முதல் 2025 வரை அரசு பணியாளர் எண்ணிக்கை 100,000-க்கும் மேல் உயர்ந்து, தற்போது 357,965 பணியாளர்களாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஒப்பிடும்போது சுமார் 10,000 பணியாளர்கள் குறைந்துள்ளனர்.