மர்ம தேசமாகும் உக்ரைனின் புச்சா! அடையாளம் தெரியாத அளவுக்கு எரிக்கப்பட்ட உடல்களின் குவியல்
உக்ரைன் - புச்சாவில் மேலும் பல மனித உடல்கள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை உத்தியோகத்தர் டெபோரா ஹெய்ன்ஸ் (Deborah Haynes) தெரிவித்தார்.
இன்னும் வீடுகளில் சோதனை செய்யவில்லை என தெரிவித்த அவர் (Deborah Haynes) , புச்சாவில், பல உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதால், இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறதாகவும் கூறினார்.
போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்யப் படைகள் புச்சா நகரத்திற்குள் நுழைந்து, தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்த நிலையில் கடந்த வார அவர்கள் அங்கிருந்து பின்வாங்கினர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த புச்சா நகரம் தற்போது மனித உடல்களால் நிரம்பி காணப்படுகின்றன. தடயவியல் நிபுணர்கள் இதுவரை 200 உடல்களை முக்கியமாக புச்சா பிராந்தியம் மற்றும் பக்கத்து நகரமான இர்பின் ஆகியவற்றிலிருந்து மீட்டுள்ளதாக கூறினார்.
அதோடு அடையாளம் தெரியாத அளவுக்கு எரிக்கப்பட்ட உடல்களின் குவியல் இருப்பதாகவும் அவர் (Deborah Haynes) கூறினார்.
மேலும் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ரஷ்ய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


