இந்து மதம் குறித்து அவதூறு பேசினால் தண்டனை ; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்
இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா அமெரிக்காவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 25 லட்சத்திற்கும் மேலான இந்துக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
புதிய மசோதா
அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்று ஜார்ஜியா. இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மக்கள் வசித்து வருகின்றனர். இம்மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை செனட் சபையில் அறிமுகம் செய்தனர்.
உலகில் 100 கோடிக்கும் மேலானவர்கள் பின்பற்றும் இந்து மதம் என்றும், இது உலகில் பழமையான மதங்களில் ஒன்று என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா, மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வரும்.
தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்பட்டதும் விரைவில் அமலுக்கு வரும். இதனை தொடர்ந்து இந்து மதம் இந்துக்கள் மீதான வெறுப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கைள் பாயும். தண்டனை குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை.
இந்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஒரு புது சட்டம் இயற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த பெருமையை ஜார்ஜியா பெறுகிறது. இதனை இந்து அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.