இந்திய வம்சாவளி கனேடிய வேட்பாளர்களில் வெற்றி கண்டவர்கள் யார் யார்?

election candidates punjabiorigin JagmeetSingh
By Arbin Sep 21, 2021 02:19 PM GMT
Arbin

Arbin

Report

நடந்து முடிந்த கனடா பொது தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் யார் யார் வெற்றிவாகை சூடினார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் மீண்டும் லிபரல் கட்சியின் ஆட்சி அமையவிருக்கிறது. ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்புக்கு வரவிருக்கிறார். இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் லிபரல் கட்சி 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது, இதில் 149 இடங்களில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019ல் நடைபெற்ற பொது தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதே நிலை தான் தற்போது 2021 தேர்தலிலும் லிபரல் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கனடாவில் மீண்டும் சிறுபான்மை ஆட்சி அமைய உள்ளது. இந்த நிலையில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் தொடர்பில் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றிவாகை சூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஒன்ராறியோவின் Oakville பகுதியில் மறுபடியும் களம் கண்ட அனிதா ஆந்த் வெற்றிவாகை சூடியுள்ளார். வாட்டர்லூ பகுதியில் போட்டியிட்ட Bardish Chagger மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ட்ரூடோ அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு வகித்த Harjit Sajjan வான்கூவர் தெற்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இன்னொரு இந்திய வம்சாவளி கனேடியரான Sukhbir Singh Gill வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். அதேப்போன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னாபி தெற்கில் போட்டியிட்ட Jagmeet Singh வெற்றியை தக்கவைத்துள்ளார். இவரது புதிய ஜனநாயகக் கட்சி கடந்த முறை 24 தொகுதிகள் கைப்பற்றி, ட்ரூடோ தலமையிலான ஆட்சியில் இடம்பெற்றிருந்தது.

ஆனால் இந்த முறை புதிய ஜனநாயகக் கட்சி 25 தொகுதிகள் முன்னிலை பெற்று இதுவரை 22 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும் இந்திய வம்சாவளி வேட்பாளர்களான Randeep Sarai, Maninder Sidhu, Ruby Sahota, Kamal Khera, Sonia Sidhu, Iqwinder Gaheer உள்ளிட்ட 17 பேர்கள் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

ஆனால், Sonia Andhi, Naval Bajaj, Manjeet Singh, Medha Joshi, Ramandeep Brar, Tejinder Singh உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் தங்கள் வெற்றிவாய்ப்பை இந்த முறை தவறவிட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US