மோடியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகளை தெரிவித்த இரு முக்கிய தலைவர்கள்!
இந்தியாவில் இடம்பெற்ற தேர்தலிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து வருகிற 8 ஆம் திகதி இரவு 8 மணிக்கு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தில் தேர்தலை நடத்தி முடித்த இந்தியாவுக்கும், தேர்தலில் வாக்களித்த 65 கோடி மக்களுக்கும் அதிபர் பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதே போன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், "நாடாளுமன்ற தேர்தல் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்தார்."