அமெரிக்காவை அடுத்து புடின் மகள்களை குறிவைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இரு மகள்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகளை விதித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஆதரவான கோடீஸ்வரர்கள், அரசியல் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் மீதும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தது.
இந்த நிலையில், சமீபத்தில் விளாடிமிர் புடினின் இரு மகள்கள் மீது பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்கா ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில், தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் புடினின் இரு மகள்கள் மீது தடைகளை விதித்துள்ளது.
இருவரது சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் அவர்களுக்கு பயணத் தடைகளும் விதித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பில் தரவுகள் வெளியாகவே, அமெரிக்காவும் தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் புதிய தடைகளை ரஷ்யா மீதும், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள்கள் இருவர் மீதும் விதித்துள்ளது.