விளாடிமிர் புடின் மகள்களை குறிவைக்கும் அமெரிக்கா!
உக்ரைன் விவகாரத்தில் அடுத்த திருப்பமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பிள்ளைகள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது ஜோ பைடன் நிர்வாகம்.
உக்ரைன் மீது 40 நாட்களுக்கும் மேலாக ரஷ்ய துருப்புகள் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. தலைநகர் கீவ்வை ரஷ்ய துருப்புகளால் நெருங்க முடியாமல் போகவே, அதன் அருகாமையில் அமைந்துள்ள புச்சா மற்றும் இர்பின் உள்ளிட்ட நகரங்களை மொத்தமாக சிதைத்துள்ளது ரஷ்ய துருப்புகள்.
மட்டுமின்றி, புச்சா நகரில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம் ஆதாரங்களுடன் அம்பலமாகவே, சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கும், போர் குற்ற நடவடிக்கை தொடர்பிலான விசாரணைக்கும் வழிவகுத்தது.
இந்த நிலையில், விளாடிமிர் புடினின் 35 வயது மகள் Mariya Putina மற்றும் katerina Putina ஆகிய இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதனால், விளாடிமிர் புடின் தமது மகள்கள் பெயரில் வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கியிருந்தால், குறித்த தடையால் அதை முடக்க முடியும் என அமெரிக்கா நம்புகிறது.
2015ல் வெளியான தகவலின்படி, katerina மற்றும் அவரது கணவரின் மொத்த சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.
ஆனால், Mariya Putina என்பவரின் சொத்துக்கள் தொடர்பில் இரகசியம் காக்கப்பட்டு வருகிறது.