விளாடிமிர் புடினிலால் நண்பரின் மகளுக்கு கடும் சிக்கல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மகள் ஸ்தானத்தில் உள்ள ஒருவருக்கு சிறை தண்டனைக்கு விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமானவரும், மகள் ஸ்தானத்தில் இருப்பவரும், எதிர்க்கட்சிகள் வரிசையில் காணப்படுபவருமான Ksenia Sobchak என்பவருக்கே தற்போது கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பத்திரிகையாளரும் 36 வயதிலேயே ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான Ksenia Sobchak, ரஷ்ய அரசாங்கம் தொடர்பில் தவறான தகவலை பரப்பி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது. 40 வயதான Ksenia Sobchak தமது சிறு வயது முதலே புடினை அறிந்து கொண்டவர்.
அதேவேளை Ksenia Sobchak தந்தையும் விளாடிமிர் புடினும் மிக நெருக்கமானவர்கள். ஆனால், உக்ரைன் போருக்கு முன்னரே Ksenia Sobchak நாட்டைவிட்டு வெளியேறியதாக புரளி கிளம்பிய நிலையில், தாம் ரஷ்யர் எனவும், ரஷ்ய குடிமகள் எனவும், எந்த நாட்டுக்கும் தாம் குடியேறவில்லை என்றும் அப்படியான எண்ணம் தமக்கு இல்லை எனவும் Ksenia Sobchak பதிலளித்துள்ளார்.
இதனிடையே, Ksenia Sobchak தொடர்பிலான தரவுகளை ரஷ்ய உளவுத்துறைக்கு பொலிஸ் தரப்பு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ksenia Sobchak மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்றாண்டுகள் வரையில் சிறை தண்டனைக்கு விதிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.
பிளேபாய் சஞ்சிகையின் மொடலாக தோன்றிய Ksenia Sobchak ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.