அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ரஷ்ய அதிபர் புடின்! பரபரப்பு தகவல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். இருப்பினும் நாங்கள் அதற்கு தயாராகவே உள்ளோம். என்றார்.
இதன்போது, புடினிடம் உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பில் சிந்தித்தது உண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புடின், அதற்கான அவசியம் இருந்ததில்லை.
உக்ரைனில் மாஸ்கோ அதன் இலக்கை அடையும். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். என்றார்.
இவ்வாறு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பாக புடின் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.