புடின் என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார் ; புலம்பும் ட்ரம்ப்
போர் நிறுத்த நடவடிக்கைக்காக அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து ரஷ்ய அதிபரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் போர் இதுவரை நிறுத்தப்படாமல் இருப்பது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்றியிருக்கிறது.
இதனால் அதிருப்தியடைந்த ட்ரம்ப் புதின் என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார் என புலம்பியுள்ளார்.
இது தொடர்பில் சமுக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப்,
பொதுமக்கள் வசிக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ஏவுகணை தாக்குதலை நடந்த புதினுக்கு எந்த தேவையும் கிடையாது.
இப்போதுதான் வியஷம் தெரிய வருகிறது. இந்த போரை நிறுத்த புதினுக்கு விரும்பம் இல்லை போல. என்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
வங்கி தடை மற்றும் இரண்டாம் நிலை தடை உத்தரவு மூலம்தான் கடைசியில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.