ட்ரம்ப்- புடின் சந்திப்பு ; மர்ம சூட்கேஸ் உடன் சுற்றி திரிந்த ரஷ்ய ஜனாதிபதியின் பாதுகாவலர்கள்
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் அலாஸ்கா நகரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, புடினைப் பாதுகாக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒருபகுதியாக புடினின் பாதுகாப்பு அதிகாரிகள், ஒரு சூட்கேஸ் வைத்திருந்தனர்.
கடுமையான பாதுகாப்பு
இது, 'பூப் சூட்கேஸ்' என்று அழைக்கப்படுகிறது.
ரஷ்ய அதிபரின் மலக்கழிவுகள், பிளா ஸ்டிக் பைகளில் சேகரிக்கப்பட்டு ரஷ்யாவுக்கு எடுத்து செல்வதற்காக, இந்த சூட்கேஸ் பயன்படுத்தப்படுகிறது. இது, நீண்ட காலமாக உள்ள ஒரு நடைமுறை.
தற்போது, 72 வயதாகும் புடினுக்கு நரம்பியல் நோய் உட்பட பல உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மலக்கழிவுகளில் இருந்து, புடின் உடல்நிலை குறித்து தகவல்களை பெறுவதை தடுப்பதற்காகவே, அவை சேகரிக்கப்பட்டு ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன.