புடினின் மிக நெருக்கமான உயரதிகாரி வெளியிட்ட பகீர் தகவல்!
ரஷ்யா உக்ரேன் மீது நடத்திவரும் படையெடுப்பை நிறுத்தப் போவதில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு(Vladimir Putin) மிக நெருக்கமான உயரதிகாரி கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் நாட்டின் பாதுகாப்பு மன்றத் துணைத்தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் (Dmitry Medvedev) உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன்(Volodymyr Zelensky )ரஷ்யா பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராய் இருப்பதாகத் தெரிவித்தார்.
படையெடுப்புக்கு முன்னரே உக்ரேன் நேட்டோ கூட்டணியில் சேர்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்று மொஸ்கோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கூட்டணியில் சேர்வதிலிருந்து விலகுவது கீவுக்கு நல்லது என்றாலும், இப்போது அமைதியை நிலைநாட்ட அது போதாது என்று மெட்வெடேவ் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா அதன் இலக்கை எட்டும்வரை உக்ரேன் மீதான அதன் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.