புடினுக்கு உளவு பார்த்தவர் லண்டனில் அதிரடி கைது!
ரஷ்ய அதிபர் புடினுக்காக (Vladimir Putin) பிரித்தானியாவில் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் லண்டன் விமான நிலையத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய சந்தேக நபர், விளாடிமிர் புட்டினுக்காக (Vladimir Putin) பிரிட்டனில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர் திங்கட்கிழமை மாலை லண்டனின் Gatwick விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடு ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டு விமான நிலையத்திற்கு வந்த போது அவரை கைது செய்யப்பட்டதாக குறித்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. கைதானவர் சட்டத்தின் பிரிவு ஒன்றின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து யார்டு தெரிவித்துள்ளது.
மேலும், “அவர் லண்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் பொலிஸ் காவலில்வைக்கப்பட்டு விசாரணைகள் இட்ம்பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.