இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது ; மூடப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பில் புதின் அதிரடி முடிவு!
போர் காரணமாக ரஷ்யாவில் மூடப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்களான டொயோட்டா, நைக் மற்றும் ஐகேஇஏ ஆகிய நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.
அதோடு இந்நிறுவனங்களுக்குச் சொந்தமான விற்பனையகங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளும் மூடப்பட்டுள்ளதுடன் ரஷ்ய அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தும் விதமாக இவை தங்களது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.
இது தொடர்பாக ரஷ்ய ஆளும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் அந்த்ரே துர்சாக் (Andrei Durzak0 வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டு நிறுவனங்களின் இத்தகைய செயல்பாடு அவை ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதப்படும் என்பதுடன், நிறுவனங்கள் மூடப்பட்டமையானது ரஷ்யமக்களுக்கு எதிரான போக்காகவே கருதப்படும் எனவும் தெரித்துள்ளது.
இத்தகைய நிறுவனங்களை அரசுடைமையாக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக துர்சாக் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதுகில் குத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், தங்கள் நாட்டு மக்களைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை பின்லாந்து நிறுவனமான பேஸர், வாலியோ மற்றும் பௌலிக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
பேஸர் நிறுவனம் சாக்லேட் மற்றும் கேக் வகைகளைத் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தில் 2,300 பணியாளர்கள் உள்ளனர். அதேசமயம் வாலியோ நிறுவனத்தில் 400 பேர் பணிபுரிந்தனர். பௌலிக் நிறுவனத்தில் 200 ஊழியர்கள் பணி புரிந்து வந்தனர்.
இதேவேளை நேடோ கூட்டமைப்பில் உறுப்பினராக பின்லாந்து உள்ள நிலையில் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கடந்த வாரம் பின்லாந்து எடுத்தமை குறிப்பிடத்தக்கது.