உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுத்தால்....உலக நாடுகளை மிரட்டும் புதின்
உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுத்தால் அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என்கிற வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடின் (Vladimir Putin) மிரட்டி உள்ளார்.
இராணுவ விவகாரங்களை பொறுத்தமட்டில், சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பின்னரும், அதன் திறன்களில் கணிசமான பகுதிகளை இழந்தபிறகும், இன்றைய ரஷ்யா உலகின் மிகவும் பலம்வாய்ந்த அணுசக்தி நாடுகளில் ஒன்றாக உள்ளது.
மேலும், பல அதிநவீன ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒரு குறிப்பிட்ட நன்மையைக் கொண்டுள்ளது.
இந்த சூழலில், உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுக்கம் விதத்தில் எந்தவொரு நாடும் நேரடியாக நம் நாட்டைத் தாக்கினால் தோல்வியையும், பயங்கரமான விளைவுகளையும் (அணு ஆயுத தாக்குதல்) சந்திக்க நேரிடும் என ரக்ஷ்ய அதிபர் (Vladimir Putin) கூறியுள்ளார்.