ரஷ்ய பெண்களை வலியுறுத்தும் அதிபர் விளாடிமிர் புடின்! இதே முக்கிய இலக்கு
ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை நடைமுறையாக்க வேண்டுமென அதிபர் விளாடிமிர் புடன் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷ்யாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990-ல் இருந்து குறைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள உயிரிழந்த நிலையிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
நம்முடைய பல இனத்தினர் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களைக் கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன.
இதேவேளை, ரஷ்யாவின் மக்கள் தொகை 2023 ஜனவரில் 1-ம் திகதி கணக்கின்படி, 14 கோடியே 64 லட்சத்து 47 ஆயிரத்து 424 ஆகும். 1999-ம் ஆண்டு புதின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாகும்.