உன்ரைன் எல்லைக்குள் முதல் முறையாக சென்ற ரஷ்ய அதிபர் புடின்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ள நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) சென்றுள்ளார்.
போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு இன்றைய தினம் (19-03-2023) ரஷ்ய அதிபர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டார்.
மரியுபோல் நகரை ரஷ்ய துருப்புக்கள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது.
தற்போது மரியுபோல் நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த நகருக்கு அதிபர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டார்.
ரஷ்ய அதிபர் புடினின் இந்த பயணம் உக்ரைன் - ரஷ்யா போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.