ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த புடின்
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்கும் நாடுகள் ரஷ்ய நாணயத்தில் வாங்க வேண்டும் என்று புடின் கூறினார்.
உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் தொடர்வதால், உலக சமூகம் ரஷ்யா மீது சில தடைகளை விதித்து வருகிறது. இருப்பினும், சில நாடுகள் ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எரிபொருளை வாங்குகின்றன.
பொருளாதாரத் தடையால் ரஷ்ய ரூபிள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் மற்ற நாடுகள் ரூபிள் கொடுத்து எரிபொருளை வாங்குவதை தவிர்க்கின்றன. இந்நிலையில், இனிமேல் ரூபிள்களில் மட்டுமே எரிவாயு வாங்க வேண்டும், இல்லையெனில் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்புக் கணக்குகள் தொடங்கப்படும் என்றும், வெளிநாட்டு நாணயம் ரூபிள்களாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.