அமெரிக்காவுடன் உறவை முறித்துக்கொள்ளும் புடின்!
அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட New START உடன்படிக்கையில் பங்குபற்றுவதை ரஷ்யா இடைநிறுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று அறிவித்துள்ளார்.
மொஸ்கோ நகரில் ஆற்றிய உரையில் விளாடிமிர் புட்டின் இதனைத் தெரிவித்தார். New START ஓப்பந்தத்தில் பங்குபற்றுவதை ரஷ்யா இடைநிறுத்துவதை நான் அறிவிக்க வேண்டியுள்ளது.
ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்தில் ஒப்பந்தம்
இது ஒப்பந்தத்திலிருந்து வாபஸ் பெறுவதல்ல. பங்குபற்றுவதை இடைநிறுத்துவதாகும் என அவர் கூறினார் .
கடந்த 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா, ரஷ்யாவின் அப்போதைய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் ஆகியோர் New START ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரு நாடுகளும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கி ஏவுகணைகள் முதலானற்றில் பயன்பாட்டுக்காக வைத்திருக்கக்கூடிய அணுவாயுதங்களின் எண்ணிக்கையை தலா 1,550 ஆக இந்த ஒப்பந்தம் மட்டுப்படுத்துகிறது.
அத்துடன் இரு நாடுகளின் கண்காணிப்பாளர்களும் பரஸ்பரம் இத்தகைய அணுவாயுதத் தளங்களை சோதனையிட்டு எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
2011 பெப்ரவரி முதல் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றவுடன் இந்த ஒப்பந்த்ததை 2026 ஆம் ஆண்டுவரை நீடித்தீருந்தார்.
அதேவேளை ஏற்கெனவே, தனது நாட்டின் அணுவாயுததத் தளங்களை அமெரிக்க கண்காணிப்பாளர்கள் பார்வையிடுவதற்கான அனுமதியை தான் மறுப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யா கூறியிருந்தது.
அமெரிக்காவின் தளங்களை பார்வையிடுவற்கு ரஷ்ய கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக ரஷ்யா தெரிவித்திருந்த போதும், அமெரிக்கா அக்குற்றச்சாட்டை நிராகரித்திருந்தது.