3 மாதங்களில் பதவியிலிருந்து விலகும் புடின்! பரபரப்பை ஏற்படுத்திய தகவல்
இன்னும் மூன்றே மாதங்களில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பதவி விலகுவார் என்று கூறியுள்ளார் ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் Mikhail Kasyanov கூறியுள்ளமை பரபொரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புடினுக்கு நெருக்கமானவர்கள் வட்டத்தில் அவரை பதவி விலகச் செய்ய யாரும் இல்லை எனகூறும் முன்னாள் ரஷ்ய பிரதமரான Mikhail Kasyanov, மூன்று விடயங்கள், தப்பினால் போதும் என்ற நிலையை உருவாக்கி, புடின் பதவி விலக வழிவகுக்கும் என்கிறார்.
அந்த வகையில், ஒன்று, உக்ரைன் இராணுவம் வலுப்பெற்று வருகிறது.ரஷ்யப் படைகள் கைப்பற்றிய இடங்களை உக்ரைன் மீட்டு வருகிறது. அத்துடன் உக்ரைனுக்கு நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் உள்ளது.
இரண்டு, புடின் போருக்கு ஆள் சேர்க்கத் துவங்கியுள்ள விடயம், ரஷ்யப் பொதுமக்களிடையே அமைதியின்மையை உருவாக்கியுள்ளது.
இதுவரை உக்ரைன் மீதான புடினுடைய போர் விடயத்தில் நடுநிலைமை வகித்து வந்த ரஷ்யப் பொதுமக்கள் கூட, அவர் இப்போது போருக்கு பொதுமக்களைக் கட்டாயப்படுத்துவதால் அவர்களுடய மனநிலை மாறியிருக்கிறது.
மூன்று, புடின் போருக்கு ஆள் சேர்க்கத் துவங்கியுள்ள விடயம், ரஷ்யப் பொதுமக்களிடையே அமைதியின்மையை உருவாக்கியுள்ளது.
இதுவரை உக்ரைன் மீதான புடினுடைய போர் விடயத்தில் நடுநிலைமை வகித்து வந்த ரஷ்யப் பொதுமக்கள் கூட, அவர் இப்போது போருக்கு பொதுமக்களைக் கட்டாயப்படுத்துவதால் அவர்களுடய மனநிலை மாறியிருக்கிறது.
ஆக, மூன்று அல்லது நான்கு மாதங்களில் ரஷ்யாவில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார் Mikhail Kasyanov.புடினைச் சுற்றியிருப்பவர்கள் பதவி விலகும்படி அவருக்கு அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், அவராகவே சீக்கிரத்தில் ஒரு முடிவு எடுக்கக்கூடும் என்கிறார் அவர்.
அதேவேளை Mikhail Kasyanov, 2000 முதல் 2004 வரை ரஷ்ய பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.