வீங்கிய வயிறுடன் கண்டுபிடிக்கப்பட்ட மலைப்பாம்பு: வயிற்றுக்குள் இருந்த பெண்மணியின் உடல்
இந்தோனேசியாவில் பெண்மணி ஒருவர் மாயமான நிலையில், அதிகாரிகள் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.
அப்போது, வயிறு வீங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மலைப்பாம்பு ஒன்று அதிர்ச்சியளிக்கும் உண்மை ஒன்றை வெளிக்கொணர்ந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவிலுள்ள Jambi மாகாணத்தைச் சேர்ந்த Jahrah(54) என்ற பெண்மணி, ரப்பர் தோட்டத்துக்குச் சென்ற நிலையில் மாயமானார்.
அவரது குடும்பத்தினர் பொலிசாருக்குத் தகவலளித்த நிலையில், பொலிசார் மற்றும் மீட்புக் குழுவினருடன் கிராம மக்களும் Jahrahவைத் தேடியுள்ளார்கள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23), வயிறு வீங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்றைக் கண்ட அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் ஒருவேளை அந்தப் பாம்பு Jahrahவை விழுங்கியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Image: ViralPress
உடனே, அந்த மலைப்பாம்பின் வயிற்றைக் கீறிப் பார்த்துள்ளார்கள் அவர்கள்.
அவர்கள் கண்ட விடயம் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், Jahrahவின் உடல் அந்த மலைப்பாம்பின் வயிற்றுக்குள்தான் இருந்தது.
அந்த பாம்பு, முதலில் அவரைத் தாக்கி, அவரது உடலைச் சுற்றி நெருக்கி, அவரை மூச்சுத்திணற வைத்து பின்னர் உயிருடன் விழுங்கியிருக்கும் என்கிறார் அக்கிராமத் தலைவர்.
அவர் சொல்வது உண்மையானால், Jahrah, சுமார் இரண்டு மணி நேரம் நரக வேதனை அனுபவித்து உயிரிழந்திருக்கக்கூடும்.
அப்பகுதியில் பல பாம்புகள் காணப்படுவதாகவும், அவற்றில் சில 27 அடி வரை நீளமுள்ள ராட்சத பாம்புகளாக இருந்ததால், அவற்றைத் தங்களால் பிடிக்கமுடியவில்லை என்றும் கூறுகிறார்கள் அக்கிராமத்தார்.
Image: ViralPress