பாலியல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் கியூபெக் கார்டினால்
தமக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என கியூபெக் மாகாண கார்டினால் மார்க் கியூலெட் தெரிவித்துள்ளார்.
கார்டினால் கியூலெட் கியூபெக் மாகாணத்தின் பேராயராக முன்னதாக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கியூலெட் வத்திக்கானின் நேரடிப் பிரதியாக கடமையாற்றி வருகின்றார்.
அடுத்த பாப்பாண்டவர் பதவிக்கான தகுதிகளைக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் கார்டினால் கியூலெட்டுக்கு எதிராக இந்த பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கார்டினாலை விசாரணை செய்வதற்கு போதியளவு சாட்சியங்கள் கிடையாது என வத்திக்கான் அறிவித்துள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கான அவசியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தம்மை தகாத முறையில் தீண்டியதாகவும், முத்தமிட்டதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாம் வழக்கு விசாரணைகளை எதிர்நோக்க தயார் எனவும் உண்மையை உலகிற்கு எடுத்துகூறவே விரும்புவதாகவும் கார்டினால் கியூலெட் தெரிவித்துள்ளார்.