கியூபெக்கில் விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு!
கியூபெக் மாகாணத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கியூபெக்கில் கொரோனா நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும், அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் முதல்வர் பிரான்கோயிஸ் லெகுலெட் (François Legault) தெரிவித்துள்ளார்.
கனடாவில் Omicron அச்சுறுத்தல் காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பூங்காக்கள், ரெஸ்டுரன்ட்கள் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் இடங்களின் மொத்த கொள்ளவில் அரைவாசிப் பேர் மட்டுமே ஒன்றுகூட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளினால் மட்டும் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் தொடர்புகளை வரையறுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் முதல்வர் பிரான்கோயிஸ் லெகுலெட் (François Legault) சுட்டிக்காட்டியுள்ளார்.