கியூபெக் மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பம்
கியூபெக் மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாகாணசபைக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றைய தினம் முதல் அதிகார பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3ம் திகதி மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பெருந்தொற்று நிலையிலும் மாகாணத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது என முதல்வர் பிரான்கோயிஸ் லாகுலாட் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணத்தின் பொருளாதார நிலைமைகள் குறித்து திருப்தி கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்டை மாகாணங்களை விடவும் கியூபெக்கின் பொருளாதார நிலைமை ஸ்திரமான நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் மக்கள் ஆணையை தாம் கோரி நிற்பதாக அவர் குற்றிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் முதல்வர் லகுலாட்டின் கட்சிக்கு 44 வீதமான ஆதரவு காணப்படுவுதாக அண்மைய கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.