கனடாவில் வாகனக் கெள்ளையில் ஈடுபட்ட பெண்
கனடாவின் மிஸ்ஸிசாகாவில் வாகனக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
க்யூபெக்கை சேர்ந்த 24 வயதுடைய அஸ்மா ஒஆத்ரியா (Asmaa Ouadria) என்ற பெண்ணும் மற்றும் இன்னொரு அடையாளம் தெரிவிக்கப்படாத சிறுவன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 29, கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் விலோ வேய் Willow Way மற்றும் Riverside Place ரிசவர்சைட் பிளேஸ் பகுதியில் இந்த வாகனம் களவாடப்பட்டுள்ளது.
காவல்துறையின் கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்மா ஒஆத்ரியா மீது, நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இவர் டர்ஹாம் பிராந்தியத்தில் இழைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலும் இந்தப் பெண் தேடப்பட்டு வந்ததாக பீல் போலீசார் கூறியுள்ளனர்.
மற்றொரு சந்தேகநபர், வயது காரணமாக அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர்மீது, திருடப்பட்ட சொத்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.