திருநங்கைகள் விளையாட தடை; வழக்குத் தொடர்ந்த டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதைத் தடை செய்ய மறுத்ததற்காக மைனே மாநிலத்தின் மீது டிரம்ப் நிர்வாகம் வழக்குத் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நடவடிக்கை, மாநில ஆளுநருக்கும் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான பொது மோதலின் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் மைனேயின் கல்வித் துறைக்கு நிதியுதவியைக் குறைப்பதாக ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களும் அடங்கும்.
இந்நிலையில் விளையாட்டுகளில் பெண்கள் பாகுபாடு காட்டப்படும்போது நீதித்துறை அமைதியாக இருக்காது என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மைனேயின் ஆளுநர் ஜேனட் மில்ஸ், இந்த பிரச்சினை பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்கான பள்ளி விளையாட்டுகளைப் பற்றியதாக ஒருபோதும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.