பிரிட்டன் ராணியாருக்கு இறுதி மரியாதை: காத்திருக்கும் மக்கள் வரிசை எத்தனை மைல் தெரியுமா?
பிரிட்டன் ராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் அருகே காத்திருக்கும் மக்கள் வரிசை மைல்கள் நீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் ராணியாரின் உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ம் திகதி இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்படும் வரையில், மொத்தம் நான்கு நாட்கள் ராணியாரின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், ராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் மட்டில் மக்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் இருந்து சுமார் 2.2 மைல்கள் தொலைவுக்கு மக்கள் வரிசை தற்போது நீண்டு காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் எனவும், சுமார் 30 மணி நேரம் சராசரியாக ஒருவர் காத்திருக்க நேரிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியத்திற்கு மேல் உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் ராணியாரின் உடல் அரச குடும்பத்தினரின் இறுதி மரியாதைக்கு பின்னர் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னரே பொதுமக்களில் சிலர் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் பகுதியில் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நான்கு நாட்களில் சுமார் 1 மில்லியன் மக்கள் இறுதி மரியாதை செலுத்த நேரில் வருவார்கள் என அதிர்பார்க்கப்படுகிறது.