ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவின் “HOOTE" செயலி: 15 இந்திய மொழிகளில் அறிமுகம்
ஆடியோவுக்கான புத்தம் புதிய சமூக வலைத்தளமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது HOOTE.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ஆம்டெக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஹூட் (HOOTE) என்ற பெயரில் ஆடியோவுக்கான சமூக வலைதள செயலியை தொடங்கி உள்ளார்.
இதனை அறிமுகம் செய்து வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், குரலை அடிப்படையாக கொண்ட சமூகவலைத்தளத்தில் இந்தியாவிலிருந்து உலக மக்களுக்காக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயலி மூலம், 60 விநாடிகள் கொண்ட ஆடியோவை பதிவேற்றலாம், நமது விருப்ப மொழியை தேர்வு செய்து ஆடியோவை கேட்கலாம்.
ஆடியோவுடன் புகைப்படம் இணைத்துக் கொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது, சுமார் 15 இந்திய மொழிகளில் HOOTE அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hoote - Voice based social media platform, from India ?? for the world ?? https://t.co/Fuout7w2Tr
— Rajinikanth (@rajinikanth) October 25, 2021