இட்டாபிகோக்கில் ஆயுதமுனையில் வாகன கடத்தல்
இட்டாபிகோக்கில் ஆயுதமுனையில் வாகனமொன்று கடத்தப்பட்டுள்ளது.
ரேஞ்ச் ரோவர் ரக வாகனமொன்று இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இசிலிங்கடன் மற்றும் குயின்ஸ்வே பகுதியில் இந்த வாகன கடத்தல் சம்பவம் பதிவாகியுள்ளது.
மூன்று பேர் கொண்ட கும்பல் வாகனத்தை கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவர் கத்தி ஒன்றை வைத்திருந்தார் எனவும் ஏனைய இருவரும் துப்பாக்கி வைத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் சில நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது வாகன கடத்தல் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் எவரிடமேனும் தகவல்கள் இருந்தால் அதனை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        