நாளை காலை இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்கும் ரணில்!
இலங்கையில் எற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அண்மையில் ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பதவியேற்றாா்.
இந்த நிலையில், இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 223 வாக்குகளில் 219 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து நாளை அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். இதனை அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க நாளை நாடாளுமன்ற வளாகத்தில் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.