இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்கும் ரணில்!
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து இன்று (14) இராஜினாமா கடிதத்தை அனுப்பினால் இன்று இரவு நீதியரசு தலைமையில் பதவியேற்க தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் குழப்பங்கள் வரலாம் என கருதியே கொழும்பில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு தேவைப்படின் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் பிரதமராக டலஸ், சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்தன ஆகியோரில் ஒருவரை நியமிக்க இரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றன.

பதவி ஏற்ற கையோடு அவசர கால சட்டத்தை அமுல்படுத்தி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப்போவதாக ரணில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே வேளை சமூக ஊடகங்கள் முடக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.      
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        