உலகப் புகழ்பெற்ற அரங்கத்தில் எலித் தொல்லை!
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள உலகின் ஆகப் பழமையான, ஆகப் பெரிய கொலசியம் (Colosseum) அரங்கத்தில் எலித்தொல்லையால் அரசாங்கம் திணவருகின்றதாக கூறப்படுகின்றது.
2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட (Colosseum) அரங்கம் இப்போது எலிகளால் பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளது. எலிகள் மொய்ப்பதைச் சமாளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ரோம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுற்றுப்பயணிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்
அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்லும் இடமென்பதால் , அரங்கத்தின் அருகே இருக்கும் வட்டாரங்களில் எலிகள் மொய்க்கும் படங்களைச் சுற்றுப்பயணிகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இத்தாலியில் சுற்றுப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடமான கொலசியம் அரங்கத்தில் மக்கள் பாதுகாப்பாக நடமாடுவதை உறுதிசெய்யச் சிறப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொலசியத்தைச் சுற்றியிருக்கும் பசுமையான பகுதிகள், எலிகள் அதிகம் இருக்கும் வடிகால்கள், ஆகியவை அடுத்த வாரம் வரை சுத்தம் செய்யப்படும். எலிகளைப் பிடிக்க பொறிகள் வைக்கத் திட்டமிடப்படும் அதேவேளை இது சாத்தியமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில் (Colosseum) அரங்கம் உள்ள ரோம் நகரில் சுமார் 7 மில்லியன் எலிகள் இருக்கின்றனவாம்.