கனேடிய மாகாணம் ஒன்றில் அடுத்தடுத்து கார் மீது ரயில் மோதிய இரண்டு விபத்துக்கள்
கனடாவில் ஆல்பர்ட்டாவில், அடுத்தடுத்து கார் மீது ரயில் மோதிய இரண்டு விபத்துக்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
முந்தைய தினம் மாலை 5.30 மணியளவில் Township Road என்ற இடத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு கார் ரயில் தண்டவாளத்தைக் கடக்கமுயன்றபோது, அவ்வழியே வந்த ரயில் ஒன்று கார் மீது மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 27 வயது பெண் ஒருவர் உயிரிழக்க, அவரது ஏழு வயது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்த விபத்து நடந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், ஆல்பர்ட்டாவிலுள்ள Ponoka என்ற பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தை கார் ஒன்று கடக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், அந்த காரை ஓட்டி வந்த 26 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்துகளுக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.